
மனிதர்கள் சாப்பிடுவதற்கு பல வகை கிழங்கு உள்ளன. அதில் ஒன்று தான் விரும்பி சாப்பிடப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு.
இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்கள்
ஊட்டச்சத்து
சர்க்கரை வள்ளிக் கிழங்குகளில் அதிக சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவு. இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற உடலுக்கு ஆரோக்கிய தரும் சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதனால் வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள் பூர்த்தியாகும்.
கொலாஸ்ட்ரால்
இந்த காலத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனை தங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் பெரும்பாலானவர்கள் கவனமாக இருக்கின்றனர். கிழங்கு வகை உணவுகள் என்றாலே அதில் சிறிதளவாவது கொழுப்பு இருக்கும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பதே கிடையாது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.
உள்ளகாயத்திற்கு
நமது உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களை நாம் மருந்து தடவி சரி செய்து விட முடியும். ஆனால் அடிபடும் போது சமயத்தில் நமது உள்ளுறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அப்படிப்பட்ட காயத்திற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் எற்பட்ட காயங்கள், வீக்கங்களை விரைவில் குணப்படுத்திடும்.
கருவுறுதல்
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் திருமணமான பெண்களுக்கு சுலபமாக கருவுற முடிகிறது. ஆனால் சில பெண்களுக்கு உடலில் ஏற்படும் சத்துக் குறைபாட்டால் கருவுறுவது தாமதமாகிறது. இப்படிப்பட்ட பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் சேர்த்து சாப்பிடுவதால் .அதில் இருக்கும் ஃபோலேட் எனப்படும் சத்து விரைவில் பெண்களுக்கு கரு உருவாதலை உதவுகிறது.
அல்சர் பிரச்சனைகள்
அன்றாட காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகிறது. சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது.
நுரையீரல்
மூச்சு சீராக இருக்க நமது நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் . ஒரு சிலருக்கு நுரையீரல் காற்றுப் பையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எம்பஸீமா எனப்படும் நோய் ஏற்படுகிறது. அதற்கு அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருவதன் மூலம், இந்த நோய் குறைபாடு தீர்ந்து மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமங்களை போக்கிடும்.
இளமை தோற்றம்
இளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஒரு ஆசை தான். சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சி தந்து இளமை தோற்றத்தை தருகிறது.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளதால் இந்த கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும் மற்றும் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
– கோமதிதேவி.பா