புரோசோன் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ

கோவை புரோசோன் மாலில், உலக மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “வாவ் ஒண்டர் உமன் “என்ற பெயரில் மகளிர் பங்கேற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியன் பிளவர் நிறுவனத்துடன் இணைந்து புரோசோன் மால் இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடத்தியது. மேலும், இன்று நடைபெற்ற கிராண்ட் பைனல் முதல் போட்டியில் 10 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆடைகளை அணிந்து நடந்து வந்தனர்.

16 வயது முதல் 26 வயது வரை உள்ள கல்லூரி மாணவிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு வந்தனர்.

மூன்றாவது போட்டியில் 26 வயது முதல் 40 வயது வரை உள்ள இல்லத்தரசிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புரோசோன் மாலின் தலைமை மேலாளர் பி. பாபு, செயலியக்க தலைவர் முசாமில், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் சி.முரளி ஆகியோர் செய்திருந்தனர்.