நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 67வது ஆண்டு விழா அமரர் நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.

முதன்மை விருந்தினராக ஜெ.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மனோகரன், கலந்து கொண்டார். அவர்  தனது உரையில் மாணவர்கள் வாழ்க்கைக் கல்வியைக் கற்று தேர்ந்து சமுதாயத்தில் தலைசிறந்த மனிதனாக திகழ்வதற்கு வேண்டிய அறிவுரைகளை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகப் பேச்சாளர் முத்துக்குமரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,  சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளையும், டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் தொலைநோக்கு கருத்துக்களையும் எடுத்துக்கூறி மாணவர்களிடையே நேர்மறை எண்ணங்களை விதைத்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

முன்னதாக கல்லூரியின் மாணவர் சேவை மன்றத்தின் தலைவர் நிரஞ்சன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் அசோக் கல்லூரியின் ஆண்டறிக்கையை தொகுத்தளித்தார்

ஆண்டு விழாவில் கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில்,  என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் பேராசிரியர் இராமசாமி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி, கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள்,  பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.