அவினாசிலிங்கம் கல்லூரியில் உலக சாதனை நிகழ்வு

கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இளந்தமிழ் மன்றம் இணைந்து மாசு இல்லாத உலகம் மீண்டும் மஞ்சப்பை என்ற உலக சாதனை நிகழ்வை நடத்தின.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில், கல்லூரியின் துணைவேந்தர் பாரதி ஹரிஷங்கர் கலந்து கொண்டு பேசுகையில், `ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்றுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்’ என்றவர் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பட்டியலிட்டு, நெகிழி பைகளுக்கு பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மேலும், கோயம்புத்தூர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச் சூழல் பொறியாளர் நளினி, சிறப்பு விருந்திரனராகப் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில்,`தமிழக முதல்வர் 2021 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மீண்டும் மஞ்சப்பை” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும், ஒருவர் ஒரு துணிப்பையைப் பயன்படுத்தினால் 22,000 நெகிழி பயன்பாட்டை தவிர்க்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் இங்கு பயிலும் 3000 மாணவிகள் 6,66,00,000 நெகிழிப் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து துணைப்பைகளையே பயன்படுத்த வேண்டும்’ என்றார். மேலும், நெகிழி பயன்பாட்டை தவிர்க்க உறுதிமொழி எடுத்தனர்.

தேனி மாவட்டம், இளந்தமிழ் மன்றம் மற்றும் இளம் துளி பதிப்பகத்தின் நிறுவனர் மற்றும் சாதனையாளர் இளம் தமிழன் அபினேஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசியதாவது, `மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் மஞ்சப்பைப் பயன்படுத்தும் நிகழ்வினையும் மரக்கன்றுகள் நடக்கூடிய நிகழ்வினையும் பதிவிடும் போது இதைப் பார்க்கக்கூடிய அனைத்துலக நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதாக அமையும் என்று, அவினாசிலிங்கப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 3,000 த்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம் மாணவர்களை விட மாணவிகள் ஒருபடி மேல்’ என்று பேசினார்.

கோயம்புத்தூர், வடக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், மாசு இல்லாத உலகம் என்ற உலக சாதனை நிகழ்வில் அனைத்திந்திய உலக புத்தக சாதனை படைத்த SV.SE. சாதனை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சாதனையாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில், இந்நிகழ்வின் மூலம் 3,000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகளாகிய நீங்கள் துணிப்பைகளைப் பயன்படுத்தும் போது 1 லட்சம் டன் காற்றைத் தூய்மைப்படுத்த முடியும் என்றும், தற்பொழுது வழங்கப்பட்ட மரக்கன்றுகளை ஒவ்வொரும் தங்களது வீட்டில் நடுவதன் மூலம் இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்றும் இன்று வழங்கப்பட்ட மஞ்சப் பைகளை நாள்தோறும் பயன்படுத்தும் போது இவ்வுலகத்தை மாசடை வதிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் கூறி, மாணவியருக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் வலியுறுத்திச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 3000 இலவச மஞ்சப்பைகளும் மற்றும் ராயல் கேர் ஹாஸ்பிடல் 2000 இலவச மரக்கன்றுகள் வழங்கினார்கள்.