பனை நமக்கு தந்த கொடை

பொங்கலுக்கு எப்போதுமே அதிகமான அளவில் பனங்கிழங்கு அறுவடை நடைபெறும். நல்ல திரண்ட நீளமான பனங்கிழங்கு விளைச்சல் காலம் மூன்று மாதம். பனங்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயி பனைமர உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றார்.

பொங்கலில் பனைசார்ந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இடையில் வந்த கரும்பாலும், கள்தடையாலும் பனையேறிகளும், பனைசார்ந்த பொருட்களும் ஓரம் கட்டப்பட்டது.

இது எங்கு கிடைத்தாலும் அதிகம் வாங்கிக்கொள்ளுங்கள்.

 

இதை உப்பு மஞ்சள் சேர்த்து அவித்து உண்ணலாம். இதற்கு இணையான ஊட்டசத்து உணவு உலகில் வேறு எங்குமே இல்லை. பனங்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி காய வைத்து (ஒடியல்) மாவாக திரித்து விதவிதமாக செய்து ஆண்டு முழுவதும் உண்டு மகிழலாம்…

நொங்கை தவிர்த்து பனம்பழமாக காத்திருந்து பனங்கிழங்கை சாப்பிடுவதால் அதிக நன்மை அதிகரிக்கும்.  எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பனையை பயன்படுத்துகின்றீர்களோ அந்த அளவு பனை உங்களுக்கு அதிக நன்மைகளை தரவுல்லது. பனையை பயன்படுத்துவோம் வாழ்வில் வளம்பெறுவோம்.

அதிக நன்மை அதிகரிக்கும்.  எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பனையை பயன்படுத்துகின்றீர்களோ அந்த அளவு பனை உங்களுக்கு அதிக நன்மைகளை தரவுல்லது.

பனையை பயன்படுத்துவோம் வாழ்வில் வளம்பெறுவோம்.

 

– கோமதிதேவி.பா