‘பத்து தல’ சிம்புவின் BOX OFFICE எழுச்சி!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன், மற்றும் ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து வறட்சியான காலகட்டத்தில் இருந்த சிம்புவிற்கு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு சிறப்பான திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று தந்தது.

ஆனால் சிம்பு, அவரை Comeback-ஆக நினைத்தது பத்து தல படம் தான் என்பது ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலேயே தெரிந்தது. அதற்கேற்றார் போல முதல் காட்சி டிக்கெட்டுகள் தீர்ந்து பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்துள்ளார் சிம்பு. சிம்பு படம் என்று சொன்னாலும் சிம்புவே இரண்டாம் பாதியில் தான் வருகிறார் என சிலர் சலித்து கொண்டாலும், இன்டெர்வல் சீனில் வேற லெவல் என்ட்ரி கொடுக்கும் சிம்புவிற்காகவே படம் பார்க்கலாம் என குஷியாகவே சொல்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

கருப்புவேட்டி, கருப்புச்சட்டை என Fire ஆன லுக் மற்றும் கெத்தான நடிப்பில் சிம்பு இம்ப்ரெஸ் செய்தாலும், எடிட்டிங்கில் கோட்டை விட்டதாக சில விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. UNDERGROUND அதிகாரியாக மாஸ் காட்டும் கெளதம் கார்த்திக், AG ராவணனாக கர்ஜிக்கும் சிம்பு, ஒரே பாட்டில் பட்டய கிளப்பும் சாயிஸா, படம் முழுவதும் ஆக்கிரமிக்கும் AR ரகுமானின் இசை என பத்து தல பார்ப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.