இந்துஸ்தான் கலை கல்லூரியில் சர்வதேச இந்திய கலாச்சார கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் சர்வதேச இந்திய கலாச்சார கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவி அனுராதா வரவேற்புரை வழங்கினார். இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக ஐஐடி பாம்பே பேராசிரியர் கண்ணன் மௌத்கல்யா கலந்து கொண்டு பேசுகையில், இந்திய கலாச்சார போர்டல் என்பது ஒரு வகையான இலவச டிஜிட்டல் வளமாகும். இந்த போர்டல் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் நிதி அளிக்கப்பட்ட இந்திய தேசிய மெய்நிகர் நூலகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த போர்ட்டல் பாம்பேயில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. கலாச்சார அமைச்சகத்தின் அமைப்புகளால் தரவு வழங்கப்பட்டுள்ளது. இது பல நூற்றாண்டுகளின் இந்திய பாரம்பரிய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஒரு ஒன்றிணைக்கிறது. இது நாட்டின் அத்தனை மூலைகளிலிருந்து இந்திய அருங்காட்சியகங்கள் நூலகம் மற்றும் கலாச்சார நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள பல கல்லூரிகளில் மேற்கண்ட இணையதளத்திலிருந்து உள்ள தகவல்களை வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றன. வரலாற்று சுற்றுலா காட்சிகளை சமூகவியல் போன்ற துறைகளில் முதுகளை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் ஆய்வுப் பொருளாக ஆசிரிய உறுப்பினர்கள் தங்கள் படிப்புகளில் அறிவுறுத்தும் பொருளாக பயன்படுகிறது. என்று கூறினார்.

மேலும் இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.