கழக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோரின் வழிகாட்டுதலில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பீளமேடு பகுதி-1ல் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், தலைமையில் கோவை பீளமேடு அகிலாண்டேஸ்வரி திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், பகுதி துணை செயலாளர்கள் ரவி, கீரின்வைஸ் சுப்பிரமணி, லட்சுமி வட்ட கழக செயலாளர்கள் ஏ.எஸ்.நடராஜ், மாடசாமி, சபரி தன்ராஜ், நாராயணன் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாநில தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் தமிழ்மறை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தனபால், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், முன்னாள் வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.