பி.எஸ்.ஜி கலை கல்லூரி – சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமையுரை வழங்கினார். செயலாளார் கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டதற்கு சிறப்பு செய்யப்பட்டது.

பி.எஸ்.ஜி கலை கல்லூரி மற்றும் சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றிக் கொண்டனர்.

சிறுதுளி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து காணொளி படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.