அரசு பள்ளிகளில் ஸ்டெம் ஆய்வு தொடக்கம்

எல் அண்ட் டி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் முயற்சியின் கீழ், லைஃப் லேப் (Life lab) மற்றும் வோஸ்கா (WOSCA) நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்பட்ட STEM லேப், மற்றும் STEM கல்வி ஆய்வகத்தை கோவையில் உள்ள 25 அரசுப் பள்ளிகளுக்கு தொடங்குகின்றன.

மேலும் அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தி கொள்ள ‘பொறியியல் எதிர்காலங்கள் ‘ என்ற ஆய்வகத்தையம், தொழில் நுட்ப பொறியியல் மற்றும் கணித கல்வி திட்டத்தையும் தொடங்குகின்றனஇந்த முயற்சி எல் அண்ட் டி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் முதன்மை திட்டங்களில் ஒன்று. மேலும் திட்டத்தின் நோக்கமாக  25 அரசுப் பள்ளிகளில் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில் உள்ள  6000 மாணவர்களைச் சென்றடைகிறது

இந்த திட்டம் இந்தியாவில் ஸ்டெம் கல்வியை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற அமைப்பான லைஃப் லேப் – வோஸ்காவுடன் இணைந்து செயல்படுகிறது. இது அறிவியல் கருத்துருவை வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான முறையில் வழங்குவதற்காக இந்த மாதிரிகள் மற்றும் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டன.

ஸ்டெம் ஆய்வகத்தை அரசு மேல்நிலைப்பள்ளி ஒத்தக்கல்மண்டபத்தில், பொள்ளச்சி மாவட்ட கல்வி அலுவலர் வள்ளியம்மாள் தொடங்கி வைத்தார்.

எல் அண்ட் டி நிறுவனத்தின் கோவை மத்திய மேலாண்மை பிரிவு தலைவர்  சரவணன் கலந்து கொண்டு கல்வித்தரத்தை உயர்த்த  திட்டங்களை விளக்கினார். லைப் லேப் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லெவிட் சோமராஜன் சிறப்புரையாற்றினர்.

இந்தத் திட்டம் குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் என்றும் லைஃப் லேப் ஸ்டெம் கல்வித் திட்டம் குறிப்பாய்  அரசு பள்ளிகளில் வடிவமைக்கிறது என்பதையும் அவர் கூறுகின்றார்.