ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சூழல் சார்ந்த ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப் பணியியல் துறை மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு கல்வி கற்பிக்கப்படும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கைப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் அதை அனைத்து தரப்பிலும் பயனுள்ள வகையில் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, முதல்வர் மற்றும் செயலர் முனைவர் சிவக்குமார், சமூகப் பணியியல் துறைத் தலைவர் பிரியதர்ஷினி, சிறுதுளி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி, சுஜினிபாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.