ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமையன்று கல்லூரியில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு நிகழ்வை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் ஜேனட் அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

 

பாஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதுநிலை இயக்குனர் அமித்குமார் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், 1281 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய உயர் மதிப்பெண்கள் பெற்ற 30 மாணவர்களை வாழ்த்தினார்.

இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.