அதிக நேரம் கண் விழிப்போர் கவனத்திற்கு

இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும் இன்சுலின், சரியாக சுரக்காமல் போவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதனால், மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.  இதுபோன்ற நீரிழிவு நோயில் டைப் 1, டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளது. டைப் 1 நீரிழிவு இளமை பருவத்திலே தோன்றுகிறது. இது மரபணு மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது.

இன்றைய காலத்தில் அதிக அளவு மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பொது அவர்கள் கூறியதாவது  இரவில் அதிக நேரம் கண் விழித்து இருப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்து தாமதமாக எழுந்திருப்பவர்களுக்கு ஆற்றலுக்காக கொழுப்பைப் பயன்படுத்துவதற்கான திறன் குறைகிறது. இதனால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கிறது என அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகிறார்

டைப் 2 நீரிழிவு நோய் அறிகுறிகள்;

தாகமாக உணர்வது, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசித்தல், சோர்வாக உணர்தல், எடை குறைதல், குறிப்பாக தசை அளவு குறைதல், உடல் காயங்கள் மெதுவாக குணமடைதல், மற்றும் கண் மங்கலாக தெரிதல் போன்ற அறிகுறிகள் சாப்பிட்ட பிறகு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதனால் விரைவில் தூங்கி அதிகாலை எழுந்து முறையான நடைபயிற்சி, உடற்பயிற்சி  மேற்கொண்டு  வந்தால் உடல் ஆரோக்கியத்தை சிறந்தது.