வந்துவிட்டது ‘தளபதி 68’ அப்டேட் முக்கிய கதாபாத்திரங்களில் பிரசாந்த், மோகன்..,

நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரிக்க உள்ள இந்த ‘தளபதி 68’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்திற்கான பூஜை வீடியோவில் நடிகர், நடிகையர் பற்றி அறிவிப்புகளையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில்  கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லியோ படம் வெளியாகி 5 நாட்களே ஆன நிலையில் நடிகர் விஜயின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் வந்துள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.