ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள்

கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காவிரி கூக்குரல் இயக்கம் – ஈஷா அவுட்ரீச் இணைந்து அமுதச்செம்மல் தாமோதரசாமி நாயுடுவின் பிறந்த தினமான உணவக தினத்தை முன்னிட்டு தொண்டாமுத்தூர் ஒன்றிய விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் துவக்க விழா கோவை ஆலாந்துறை பஞ்சாயத்து வலையன்குட்டை பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்க உரை வழங்கினார்.

மேலும், எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனர்களின் தாளாளரும், நிர்வாக அறங்காவலருமான மணிமேகலை மோகன், அரோமா ஶ்ரீ மகாலட்சுமி டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர் பொன்னுசாமி மற்றும் வெள்ளிங்கிரி உழவர் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் குமார் ஆகியோர் இணைந்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

 

நிகழ்வின் இறுதியில் கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பாலச்சந்தர் ராஜு நன்றியுரை வழங்கினார்.