Playoff செல்ல csk விற்கு வரும் புதிய ஆபத்து – இன்று வரப்போகும் மிக முக்கிய முடிவு

ஐபில் 16 வது சீசன் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிளேஆஃப் சுற்றிற்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நழுவ விட்டது. அதே போல் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றிற்கான வாய்ப்பை உறுதி செய்தது.

இன்று நடக்க உள்ள போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணி எதிர்கொள்கின்றன. இதில் மும்பை வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறும் அதேபோல் லக்னோ அணி வெற்றி பெற்றால் 3 ஆம் இடத்திற்கு தகுதி பெறும்.

இதனால் அடுத்து நடக்க உள்ள சென்னை மற்றும் டெல்லி அணிக்கு இடையே நடக்கும் போட்டியில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை தோற்றால் சென்னை அணியின் பிளேஆஃப் வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கும். ஏனென்றால் பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை அணி அடுத்து நடக்க உள்ள போட்டிகளில் கட்டாயம் இரண்டிற்கு ஒரு போட்டியாவது தோற்றால் மட்டுமே சென்னை அணி பிளேஆஃப் சுற்றிற்கு தகுதி பெரும்.