தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களும் பங்குபெறலாம். வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் மே 22 முதல் மே 26, 2023 வரை வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 11,800 வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே (20 நபர்கள்) உள்ளது.

மேலும் பதிவுக்கு மின்னஞ்சல் business@tnau.ac.in மற்றும் தொலைபேசி 616001 : 0422 – 6611310 கைபேசி எண்: 99949 89417 தொடர்பு கொள்ளலாம்.