உடலுக்கு குளிர்ச்சி தரும் கேப்பை கூழை குடிங்க!

பிப்ரவரி மாதமே வெயில் கொழுத்த தொடங்கி பலரும் உடல் உஷ்ணம் அடைதல் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். உடல் வெப்பத்தை தணித்து ஆரோக்கியத்தை அள்ளி தரும் கேப்பை கூழின் பயன்களை தெரிந்து கொள்வோம்.

உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், கால்சியம் மற்றும் இரும்பு சத்து கேப்பை கூழில் இருக்கிறது. பற்களும் எலும்புகளும் வலுவாகவும் உறுதியாகவும் இருக்க கால்சியம் முக்கிய பங்களிக்கும் நிலையில், மோருடன் சேர்த்து சாப்பிடும் கூழ் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை அளிக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் கேப்பை சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

இதய நோய் வாய்ப்புகளை குறைத்து தலை வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது கேழ்வரகு. தூக்கமின்மையை ஒழித்துக்கட்டும் கேப்பைக்கு மன உளைச்சல் பதட்டம் மற்றும் மன சோர்வை சரி செய்யும் ஆற்றலும் உள்ளது. இதனை தோசை, அடை மற்றும் கஞ்சி என விதவிதமாக செய்து சாப்பிட்டு அதில் இருக்கும் அபாரமான சத்துக்களை பெற்றுக்கொள்ளலாம்.