அரிமா சங்கங்களின் பதவியேற்பு விழா

லயன்ஸ் கிளப் ஆப் சிபிஇ நேருநகர், லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ராயல் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் சிபிஇ காளபட்டி சிறகுகள் ஆகிய 3 சங்கங்களில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள கோ – இந்தியா கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆளுநர் ராம்குமார் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக FAIRS – ன் தேசிய அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து, முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன், பன்னாட்டு இயக்குனர் மதனகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.