பி.எஸ்.ஜி கலை கல்லூரியில் 35 வது பட்டமளிப்பு விழா

கோவை, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 35 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பிருந்தா பட்டமேற்பு உறுதி மொழியை கூற மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதில் 3877 மாணவர்களுக்கு பட்டங்களும், 71 தரவரிசை பெற்றவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

 மேலும், தமிழ்நாடு ஆளுநர், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் ‘ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்சஸ்’ கட்டிடத்திற்கான அடிக்கல்லைத் திறந்து வைத்தார்.