இந்தியன்  பப்ளிக் பள்ளி சார்பில் தேசிய அளவிலான ரோபோட்டிக் சாம்பியன் போட்டி

கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளி சார்பில் தேசிய அளவிலான ரோபோடிக் போட்டி 2023 சனிக்கிழமை அன்று வளாகத்தில் துவங்கியது. இந்நிகழ்விற்கு கோவை காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று இருந்தாலும் பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச கல்வியில் ரோபோட்டிக் படிப்பு ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. சர்வதேச அளவில் சாதிப்பதற்கு இது தூண்டுகோலாக அமையும், பல்வேறு துறைகளில் ரோபோடிக் பங்களிப்பு அவசியமாக இருக்கிறது அதை கருத்தில் கொண்டு இந்தியன் பப்ளிக் பள்ளி பிரத்தியோகமாக இந்த சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவது தற்போது உள்ள குழந்தைகளுக்கு சர்வதேச அளவில் சாதிக்க மிக உதவியாக இருக்கும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, போட்டியை குறித்து இந்தியன் பப்ளிக் பள்ளியின் தலைவர் அசோக்குமார் பேசுகையில், இந்தியன் பப்ளிக் பள்ளி சார்பில் கடந்த 2019 – 2020 கல்வியாண்டில் முதல் போட்டியை நடத்தினோம். தற்போது 2வது முறையாக ரோபோட்டிகா 2023 போட்டி நடைபெறுகிறது. சர்வதேச கல்வியில் ரோபோட்டிக்கா பாடப்பிரிவு மிகவும் மாணவர்களுக்கு அவசியம் என்பதால் பிரத்யோகமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்கிறோம். என்று கூறியுள்ளார்

போட்டியில் 75 அணிகள் 10 சர்வதேச பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 300 பேர் பதிவு செய்து இதில் கலந்து கொண்டுள்ளனர். மூன்று பிரிவுகளில் 9 போட்டிகள் நடைபெறுகிறது. இறுதியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழும், பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கிறோம் தொடர்ந்து அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த இந்தியன் பள்ளி போதிய வசதிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அசோக்குமார் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இந்தியன் பள்ளி தலைமை நிர்வாக அதிகாரிகள் தாமோதரன், ராஜ்குமார், முதல்வர் ருச்சிக்கா, ரோபாடிகா போட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் அனுராதா இயக்குனர்கள் சோனாலி, சித்தாசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.