நன்மைகள் கொட்டிக்கொடுக்கும் ஏலக்காய்

பொதுவாக ஏலக்காய் என்றால் குழந்தைகள் ஒதுக்கி விடுவார்கள். ஏன் பெரியவர்கள் கூட சில சமயம் அதை ஒதுக்கி விடுவார்கள். அப்படி ஒதுக்கப்படும் ஏலக்காயில் ஏராளாமான நன்மைகள் உள்ளன. அவை என்னனென்ன என்பதை இத்தொகிப்பில் பார்க்கலாம்.

இதை வாயில் போட்டு மென்று வந்தால் சுவாச பிரச்சனை சீராக்கப்படும் . ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஒரு சிறந்த தீர்வை தரும், கடுமையான வாய் துறுநாற்ற பிரச்னை உள்ளவர்கள் வாயில் தினமும் ஒரு ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் அந்த பிரச்னை தீர்க்க படுகிறது.

நெஞ்சில் சளி பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மென்று வந்தால் நாளடைவில் சளி பிரச்சனை குணமாகும்.

பசியின்மை பிரச்சனை சிலருக்கு இருக்கும். அதாவது என்ன உணவு குடுத்தாலும் அதை பெரிதாக விரும்ப மாட்டார்கள். அப்படி உள்ளவர்கள் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டுகொண்டாள் உடம்பில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்று பசி எடுக்க ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.