பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் தேசிய அளவிலான சதுரங்க போட்டிகள்

பிப்ரவரி 10 முதல் 16 வரை நடைபெறுகிறது

42 வது தேசிய அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் மற்றும் 20 வது தேசிய மகளிர் அணி செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பிப்ரவரி 10 முதல் 16 வரை நடைபெறுகிறது

மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவை மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து போட்டியை நடத்துகின்றன.

மொத்த பரிசுத் தொகையாக ரூ.10, 00, 000/- ஆண் பெண் இரு பாலருக்கும் சமமாக பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்கள் ரூ.1,25,000 பரிசுத் தொகை பெறுவர். ஒன்பது சுற்று கொண்ட போட்டியில் பொது பிரிவில் இருபத்தி எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் பதினான்கு அணிகளும் பங்கேற்கின்றன.

முக்கிய செஸ் இணையதளங்களில் விளையாட்டை நேரடியாக ஒளிபரப்ப 30 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட உள்ளன. MCET கல்லூரி நிர்வாகம் அனைத்து வீரர்களுக்கும் இலவச தங்கும் வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

சாம்பியன்ஷிப்பின் தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் தலைவரும், சக்தி குழுமத்தின் தலைவருமான மாணிக்கம் தலைமை வகிக்க உள்ளார். உலக சதுரங்க சம்மேளனத்தின் முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக தூர்தர்ஷன் நிகழ்ச்சித் தலைவர் ஸ்ரீ ஆர்.முரளி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்ரீ ரகுகுமார் மற்றும் எம்.சி.இ.டி.யின் தாளாளர் ஸ்ரீ.எம்.ஹரிஹர சுதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.