குஜராத்தில் புதிய தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயர் பெயர்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி தனது நூறாவது வயதில் காலமானார். கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 30ஆம் தேதி காலமானார்.

அவரின் இறுதிச் சடங்கை காலையே எளிதாக நடத்தி முடித்து தனது பணிகளை செய்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடியின் நினைவாக குஜராத் மாநிலத்தில் ஒரு தடுப்பணைக்கு ‘ஹீராபா ஸ்மிரிதி சரோவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள நயாரி ஆற்றின் குறுக்கே 400 அடி நீளம், 150 அடி அகலத்தில் இந்த தடுப்பணை கட்டும் பணி நடைபெறுகிறது. இதற்கான பூமி பூஜை கடந்த 4ஆம் தேதி ராஜ்கோட் மேயர், உள்ளூர் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது. இந்த தடுப்பணையை கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை கட்டுகிறது.

ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படும் இந்த புதிய தடுப்பணை 2.5 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் திறன் கொண்டது. பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் அவரின் பெயர் தடுப்பணைக்கு சூட்டப்படுகிறது என்று தெரிவித்தார்.