‘கோவை ரைசிங்’ தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

கோவை மக்களவைத் தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரின் தேர்தல் அறிக்கை ‘கோவை ரைசிங்’ எனும் தலைப்பில்  வெளியாகியுள்ளது. இதனை, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் (எக்ஸ்.எம்.எல்.ஏ), பொங்கலூர் பழனிசாமி, மகேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

அதன் விவரம்:

  • கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும்.
  • கோழிப் பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் மற்றும் இதர பிரச்னைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படும்
  • நகருக்குள் வாடகைக் கட்டிடங்களில் இருக்கும் குறுந்தொழில்களுக்கு புதிய தொழில் பூங்காவில் கடை அமைக்க வாய்ப்புகள் வழங்கப்படும்.
  • தமிழகத்தில் 7 லட்சம் வெல்டர்களுக்கு உதவும் வகையில், விபத்து நிவாரணத் திட்டம் உட்பட வெல்டர்களுக்கான நல வாரியம் ஏற்படுத்தப்படும்.
  • விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு, மின்சார செலவு உள்ளிபட் அனைத்துப் பிரச்சினைகளும் கவனித்துத் தீர்க்கப்படும்
  • தென்னை விவசாயிகளின் விருப்பத்திற்கு இணங்க நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  • காற்றாலை உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தக்கூடிய வகையில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டு, காற்றாலை பேங்கிங்கிற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலானக் கொள்கை அறிவிக்கப்படும்
  • உலோக வார்ப்பு தொழிலுக்கான மனிதவள திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.
  • எல் அண்ட் டி பைபாஸ் நான்கு வழிச்சாலையாக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
  • கோயம்புத்தூருக்கு அருகே பசுமை MMI.P நிறுவப்படும்.