தொடரை வெல்லப்போவது யார்?

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன.

மும்பையில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு ஆட்டங்களுமே மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் அமைந்து ரசிகர்களிடம் தொடரை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த டி-20 தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணியின் இளம் வீரர்கள் களம் கண்டு வரும் டி-20 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும் என்பதால் மீண்டும் வெற்றி ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.