100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது

கோவையில்  ஆலந்துறை அடுத்த ஹை ஸ்கூல் புதூர் பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு  50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே சுமார் நூறு ஆண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் வலுவிழந்து உள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை மதியம் அப்பகுதியில் வீசிய காற்றின் காரணமாக வலுவிழந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து விலகி ஓடினர்.

இக்காட்சியை  அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ கட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு பள்ளி குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் பெரும் சேதத்தை தவிர்க்கப்பட்டது.