சுகுணா புட்ஸ் – பி.எஸ்.ஜி.ஐஎம் சார்பில் மாணவர்களுக்கான கிராமப்புற சந்தைப்படுத்தல் போட்டி

வேளாண் உணவுத் துறையில் கவனம் செலுத்தும் விதமாக இந்தியாவின் பிரமாண்ட கோழிப்பண்ணை நிறுவனமான சுகுணா புட்ஸ் – கோவை பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்(பி.எஸ்.ஜி.ஐஎம்) கல்லூரியுடன் இணைந்து ‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்’ என்னும் பெயரில் கிராமப்புற சந்தைப்படுத்தல் போட்டியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வரப்பெற்று அவற்றில் சிறந்த கட்டுரைக்கு பரிசு வழங்கப்பட்டன.

சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் தீவன விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் முரளி, பி.எஸ்.ஜி.ஐஎம் கல்லூரியின் மார்க்கெட்டிங் துறை தலைவர் அருள் ராஜன் ஆகியோர், வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் அன்ட் ரிசர்ச், மதுரை, தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் மற்றும் பி.எஸ்.ஜி.ஐஎம் ஆகிய கல்லூரிகளிலிருந்து வரப்பெற்ற கட்டுரைகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கினர்.

வேலூர், விஐடி ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்லூரி இது சம்பந்தமாக தனித்துவமான ஆலோசனையை விளக்கக் காட்சி மூலம் வழங்கியதன் காரணமாக அக்கல்லூரிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியானது கிராமப்புற சந்தைப்படுத்தல் தொடர்பான நுணுக்கங்கள் மற்றும் விவசாய உணவுத் துறையில் பரந்து விரிந்துள்ள தன்மையை புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது, குறிப்பாக இந்த நிகழ்ச்சி கால்நடை தீவனங்களில் அதிக கவனம் செலுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவாதங்கள் மற்றும் நேரடி அமர்வுகளும் இடம் பெற்றிருந்தன. இதன் காரணமாக வேளாண் உணவுத் தொழில் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பு பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு உதவியதோடு அது தொடர்பான விழிப்புணர்வையும் அவர்களிடையே அதிகரிக்கச் செய்யும் விதமாக அமைந்திருந்தது.

இந்த போட்டிக்கு வரப்பெற்ற மொத்த கட்டுரைகளில் 15 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 3 கட்டுரைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் சுகுணா ஃபீட்ஸ் துறையின் மூலம் விருதுகள் மற்றும் இன்டர்ன்ஷிப் திட்டங்கள் வழங்கப்பட்டன.