வி.எல்.பி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவைப்புதூர், வி.எல்.பி ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 650 பேருக்கு பட்டத்தினை வழங்கினார்.

பல்கலைக்கழகத் தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற 71 மாணவர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.