லயன்ஸ் இயக்கம் சார்பில் மண்டல சந்திப்பு விழா

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக கோவை சுந்தராபுரம் லின்டஸ் கார்டன் மண்டபத்தில் சந்தோஷம் 2023 “செண்பகம்” மண்டல சந்திப்பு விழா ஞாயற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் லயன்ஸ் இயக்கத்தில் சிறப்பாக சேவை செய்வதற்காக மாவட்டத் தலைவர் மக்கள் தொடர்பு மற்றும் வட்டார தலைவர் செந்தில்குமாரை பாராட்டி மாவட்ட ஆளுநர் ராம்குமார், ஆன்மீக பேச்சாளர் சுகிசிவம் ஆகியோர் இணைந்து விருது வழங்கினார்கள். இதேபோல் சிறப்பாக சேவை செத்ததற்காக பல்வேறு நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவை மாவட்ட அமைச்சரவை செயலாளரும், விழா குழுவின் தலைவருமான லயன் ராஜ்மோகன், பதிவு குழு தலைவர் முருகேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.