பழுப்பு அரிசி Vs வெள்ளை அரிசி

பழுப்பு அரிசியில் வைட்டமின் சி தவிர,
அனைத்து வைட்டமின் சத்துகளும் அடங்கியுள்ளன.
பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் இந்தச் சத்துகள் எவையும் இருக்காது.

100 கிராம் பழுப்பு அரிசியில் 6.7 கிராம் புரதச்சத்து இருக்கிறது.
வெள்ளை அரிசியில் 0.7 கிராம் மட்டுமே இருக்கிறது.

100 கிராம் பழுப்பு அரிசியில் 0.6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.
ஆனால், வெள்ளை அரிசியில் 0.2 கிராம் மட்டுமே இருக்கிறது.

இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைச் சீராக வைத்திருக்க உதவும்.
100 கிராம் பழுப்பு அரிசியில் 3.2 கிராமும்,
வெள்ளை அரிசியில் வெறும் 0.7 கிராமும் இருக்கிறது.

உடலிலிருக்கும் நல்ல கொழுப்பு செரிமானத்தை எளிதாக்கி, உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வழிவகுக்கும். அத்தகைய நல்ல கொழுப்பு, வெள்ளை அரிசியைவிட பழுப்பு அரிசியில் 50 சதவிகிதம் அதிகமாக காணப்படுகிறது.

 

– பா.கோமதி தேவி