கோவையில் எஸ்.பி.ஐ சார்பில் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி டிசம்பர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியினை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசம்.

சிறப்பு சலுகைகள்

கண்காட்சியில் வீடு மற்றும் கார் கடன் வாங்குபவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வீட்டுக் கடன் 8.75% முதல் (மாதத்தவணை ரூ.787/- ஒரு லட்சத்திற்கு) என்ற வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகள் வரையில் திருப்பிச்செலுத்தும் வசதியுடன் வழங்கப்படுகிறது.

கார் கடன் 8.45% முதல் என்ற வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதலாக 0.5% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. குடியிருப்பு வீட்டுமனையிடங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படுகிறது.

விழாக்காலத்தை முன்னிட்டு பரிசீலனைக் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களுடன் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு வங்கி சார்பில் உடனடி கடன் ஒப்புதலும் அளிக்கப்படுகிறது.

இக்கண்காட்சியில் புது வீடு வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கு, வீட்டின் கட்டுமானத்தில் மாற்றம் செய்வதற்கும் மற்றும் கார் வாங்குவதற்கும் சுலபத்தவணை முறையில் எளிதாக கடன் பெறலாம். கட்டுமானத் துறையில் முன்னணியில் திகழும் நிறுவனத்தினர் மற்றும் கார் டீலர்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறார்கள்.

24 ஆம் தேதி மாலை 4 மணி முதல் சூப்பர் சிங்கர்ஸ் குழுவினர் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.