இலவசமாக ஆதார் கார்டிலில் முகவரியை மாற்றலாம்

ஆதார் கார்டில் உள்ள உங்களின் முகவரியை ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு விதத்திலும் புதுப்பித்துக் கொள்ள முடியும். அதிலும், ஆன்லைன் மூலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இலவசமாக முகவரியை மாற்றிக் கொள்ளலாம். அதன் பிறகு, கட்டணம் செலுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஆன்லைனில் ஆதாரில் முகவரியை எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்.

உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://myaadhaar.uidai.gov.in/) சென்று உள்நுழையவும். பிறகு ‘எனது ஆதார்’ என்பதை கிளிக் செய்து ‘ஆதாரைப் புதுப்பிக்கவும்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன் பிறகு, முகவரி புதுப்பிப்பை கிளிக் செய்து, உங்கள் முகவரி உள்ளிட்ட தகவல் படிவத்தை நிரப்பவும்.
உங்கள் பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், வங்கி அறிக்கை போன்ற சரியான முகவரி ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும். பின்னர், அனைத்து விவரங்களைக் கவனமாக மதிப்பாய்வு செய்து ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு, உங்கள் செல் எண்ணிற்குக் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) பெறுவீர்கள்.

மேலே குறிப்பிட்ட செயல்முறைகளைப் பயன்படுத்தி ஆதார் அட்டையைப் புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.