வான் கோவின் ஓவியத்திற்கு சூப்பை ஊற்றிய ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்

‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ இயக்கத்தின் ஆர்வலர்கள் நேஷனல் கேலரியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஓவியரான ‘வான் கோவின்’ சூரியகாந்தி ஓவியத்தின் மீது சூப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரண்டு ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்ற சூழலியல் ஆர்வலர்கள், வின்சென்ட் வான் கோவின் சூரியகாந்தியின் தலைசிறந்த படைப்பின் மீது தக்காளி சூப்பை வீசினர். இதனால் கேலரிகள் சிறந்த கலைப் படைப்புகளுக்குப் பொதுமக்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் டி-ஷர்ட்களை வெளிப்படுத்த இந்த பெண் எதிர்ப்பாளர்கள், 1888 ஆண்டின் மிகப்பெரிய கலைப்படைப்பின் மீது சூப்பை எறிந்தனர். ஆனால் ஓவியம் கண்ணாடித் தாளால் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக “பாதிக்கப்படவில்லை” என அருங்காட்சியகம் தெறிவித்ததொடு, ஓவியம் சுத்தம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து 24 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.