நோய்களை தடுக்க நாட்டு சர்க்கரை சேர்க்க

இன்று பெரும்பாலானவர்கள தங்களின் அன்றாட உணவுகளில் தீங்கான ரசாயன தன்மை கொண்ட வெள்ளை சர்க்கரையையே தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக நமது பாரம்பரிய பல நன்மைகள் கொண்ட நாட்டு சர்க்கரை சேர்த்து வந்தால் பல நோய்களுக்கு மருத்துவ குணமாகுவதற்கு பயன்படும்.

நாட்டு சர்க்கரை சேர்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:

உடல் எடை குறையும்: வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு என்பதால், உடல் எடை குறைக்க நினைப்போர் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்துவது நன்மை தரும்.

ஆஸ்துமா குறையும்: ஆஸ்துமா பிரச்னை, மூச்சு வாங்குதல், நுரையீரல் போன்ற பிரச்சகள் இருப்பவர்கள் நாட்டுச் சர்க்கரை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

கருப்பைக்கு நல்லது: மாதவிடாய் சமயத்தில் நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டால் நல்லது. ஏனென்றால் நாட்டுச் சர்க்கரை கருப்பை தசைகளை தளர்வாக்கி வலியில்லா மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது.

வயிற்றுக் கோளாறுக்கு நல்லது: அஜீரணம், வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான அணைத்து பிரச்னைகளுக்கு நாட்டுச்சர்க்கரை உதவும்.

சோர்வை நீக்கும்:  உடல் சுருசுருப்பு இல்லாமல் சோர்வாக இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டு வந்தால் உடல் களைப்ப, சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

சளி,இருமல் நீங்கும் :  ஓமத்துடன், நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி , இருமல் சரியாகும்.

சருமத்திற்கு நல்லது: நாட்டுச் சர்க்கரையில் விட்டமின் பி இருப்பதால் சருமச் செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

 

– பா.கோமதி தேவி