நேரு கலைக் கல்லூரியில் வெள்ளி விழா

நேரு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டம் பி.கே. தாஸ் நினைவு கலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அனிருதன் வரவேற்புரை வழங்கினார்.

நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் விழாவிற்கு தலைமை தாங்கினார். அவர் தமது உரையில், விடாமுயற்சியும் அயராத உழைப்பும் என்றுமே வெற்றியைத் தேடித் தரும் என்ற கருத்தினை கூறினார்.

சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கான கோஸ்டா ரிகா தூதர் கிளாடியோ அன்சோரெனா கலந்து கொண்டு, இக்கல்வி நிறுவனம் இன்னும் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற வேண்டுமென தனது வாழ்த்துக்களைக் கூறினார்.

நேரு கல்விக் குழுமத்தின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார் வாழ்த்துரையில், கல்வியால் மட்டுமே வீடும் நாடும் தலைநிமிர முடியும் என்று கூறினார்.

விழாவில் ‘மதிப்பு மிக்க விருதாளர்கள்’ என்ற தலைப்பில் நலம் விரும்பிகள் வகை, முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்களில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்கள், குறிப்பிட்ட முதலாளிகளுக்கும், ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயின்று சாதனை புரிந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.