க்ரோமாவின் கோடை கால விற்பனை சலுகைகள் ஆரம்பம்

க்ரோமா தனது கோடைக்கால விற்பனை கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 2024 வரை தொடரும் என க்ரோமா அறிவித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியவுடன், கோடைக் கால விற்பனைச் சலுகை மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். வாடிக்கையாளர்கள் க்ரோமா விற்பனை நிலையங்கள் மற்றும் www. croma.com இணையதளத்தில், வெறும் ரூ. 1,500 செலுத்தி 1.5 டன் ஸ்பிளிட் ஏசிகளை வாங்கலாம். வாடிக்கையாளர்கள் எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்து பரிமாற்றச் சலுகையில் புதிய ஏசி-யை வீட்டிற்கு வாங்கிச் செல்லலாம்.

கவர்ச்சிகரமான பரிமாற்ற மற்றும் வீட்டு உபயோக தயாரிப்புகளை மேம்படுத்தும் வாய்ப்புகள், பணம் திரும்பப் பெறும் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் 24 மாதங்கள் வரை விருப்பத் தேர்வுகளுடனான மாதாந்திரத் தவணைத் திட்டங்களுடன் 250-க்கும் மேற்பட்ட ஏர் கண்டிஷனர் வகைகள், 300-க்கும் மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டி வகைகள் , ஏர் கூலர்கள் மற்றும் பல வகையான மின் விசிறிகளை வாங்கி ரூ. 45, 000 வரை சலுகைகள் மற்றும் பிற நன்மைகளை அனுபவிக்கலாம்.

இந்த சலுகைகளில் முக்கியமாக, இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி-கள் வெறும் ரூ. 24990 முதல் தொடங்குகின்றன.மேலும் ஏசி-களுக்கு ரூ. 6500 வரை பரிமாற்றச் சலுகைகளையும் வழங்கப்படுகிறது. ரூம் கூலர்கள் எனப்படும் ஏர் கூலர்கள் ரூ.4,500 முதல் கிடைக்கின்றன. எல்ஜி ஐஎன்வி / ஏசி 1.5 டன் 5-ஸ்டார் ஏசி, அசல் விலை ரூ .91,990 ஆகும். இப்போது அது வெறும் ரூ. 53,490-க்கு கிடைக்கிறது. இது ரூ. 45,000 வரை சேமிப்பை வழங்குகிறது. கூடுதலாக, பஜாஜ் பிஎம்ஹெச் 18 டிஎல்எக்ஸ் ஏர் கூலர் இப்போது ரூ. 4,500 முதல் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள் ஃப்ரிட்ஜ்களை வாங்கும்போது 24 மாதங்கள் வரை எளிய மாதாந்திரத் தவணை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். க்ரோமா சொந்த தயாரிப்பு பிராண்டுகளில் உள்ள குளிரூட்டும் உபகரணங்களுக்குப் பெரிய சலுகைகள் வழங்கப்படுகிறது. திறன் வாய்ந்த குளிரூட்டலுக்காக ஒவ்வொரு க்ரோமா இன்வெர்ட்டர் ஏசியுடனும் க்ரோமா பிஎல்டிசி ஃபேன் (மின்விசிற) இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு க்ரோமா பக்கவாட்டு குளிர்சாதனப் பெட்டியுடன் (சைட் பை சைட் ரெஃப்ரிஜிரேட்டர்), கூடுதல் செலவு இல்லாமல் க்ரோமா காபி மேக்கரைப் பெறலாம். க்ரோமா வாட்டர் பியூரிஃபையர் வாங்கி, ஆரோக்கியமான சமையலுக்கு க்ரோமா ஏர் ஃபிரையரை இலவசமாகப் பெறலாம். க்ரோமா கூலரை வாங்கும்போது இலவசமாக  க்ரோமா 750 வாட் மிக்ஸர் கிரைண்டரைப் பெறலாம். கூடுதலாக, 5,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் போது 18 மாதங்கள் வரை கட்டணம் இல்லா தவணை முறை (நோ காஸ்ட் இஎம்ஐ) சலுகையை அனுபவிக்கலாம். எளிதாகப் பணம் செலுத்துதல் மற்றும் கூடுதல் இலவச அன்பளிப்புத் தயாரிப்புகளுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய க்ரோமா பிராண்டட் தயாரிப்புகளை வாங்கி, உங்கள் வீட்டை நவீன சாதனங்களுடன் மேம்படுத்த இது ஒரு சரியான வாய்ப்பாகும்.க்ரோமா ஒரு கவர்ச்சிகரமான தனித்துவமான பரிமாற்றச் சிறப்புச் சலுகையை (எக்ஸ்சேஞ்ச் போனஸை) அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் எந்தவொரு புதிய ஏசி வாங்கும் போதும் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக, உங்கள் பழைய ஏசியை மாற்றி, டன் அளவுக்கேற்ற போனஸைப் பெறலாம். 1 டன்னுக்கு ரூ. 1000, 1.5 டன்னுக்கு ரூ.1500 மற்றும் 2 டன்னுக்கு ரூ. 2000 போனஸ் சலுகை கிடைக்கும்.  2,000 ரூபாய் வரை கூடுதல் பரிமாற்ற போனஸுடன் பரிமாற்ற (எக்ஸ்சேஞ்ச்) சலுகை கிடைக்கும்