மணப்பெண்களை கவரும் கலாசாவின் தங்க நகை கண்காட்சி

கோவையில் கலாஷா பைன் ஜூவல்ஸின் மணப்பெண்களுக்கான தங்க நகை கண்காட்சி துவங்கியது.

தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நகை விற்பனை நிறுவனமான கேப்ஸ் கோல்டு நிறுவனம் (1901) சார்பில், கலாஷா பைன் ஜூவல்ஸ் தங்க நகை கண்காட்சி டிசம்பர் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் மணப்பெண்களுக்கான நகைகள், கைவினை அலங்கார நகைகள், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திருமண நகைகள், தங்கம், வைரத்தால் வடிவமைக்கப்பட்ட நகைகள் போன்றவை இடம்பெறுகின்றன.

இதுகுறித்து ஷ்ரவன் குமார் கூறும்போது, கலாஷாவின் உரிமையாளர் கண்காட்சியில் சரியான தொகுப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். எங்களது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை இது உறுதி செய்துள்ளது கோவையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மணப்பெண்களுக்கான புதிய நகைகள் சிறப்பானதாக அமையும். மேலும் டெம்பிள் நகைகள், தினமும் அணியக்கூடிய ஸ்டேட்மென்ட நகைகளும் இடம்பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கலாஷா பைன் ஜூவல்ஸ் பங்குதாரர் அபிஷேக் வாஸ்கி கூறும்போது கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நகைகள், மணப்பெண்களால் ஈர்க்கப்பட்டு அவர்களை ராணியாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நிகிதா வி.ஷா, பிரசன்னா விஸ்வநாதன், செல்வி நிரூபனா நடராஜன், ஸ்வேதா ஸ்ரீதர், கீதா சவுந்தரராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.