வாழ்வதற்கான ஆதாரமே உணவு; பிரபலங்களின் பார்வையில் உலக உணவு தினம்

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்ற  தீயநோய் அணுகாது. மனிதன் உட்பட உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரமே உணவுதான். அந்த வகையில், தரம், சுத்தம் மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும், உணவின் அவசியத்தை உணர்த்தும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நவீனத்திலும் பழமை மாறவில்லை

இதனை முன்னிட்டு கோவை மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஹோட்டல் ஹரிபவனம் உரிமையாளர் பாலசந்தர் ராஜு பாதுகாப்பான உணவுமுறைகள் குறித்து நம்மிடம் பேசினார்.  “நம் நாட்டின் பாரம்பரியத்தோடுகூடிய உணவில் நிறைவான சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இந்த உணவுதுறையில் ஐம்பது ஆண்டுகள் கடந்து இன்றளவும் செயல்படுகிறோம். பாரம்பரிய தன்மை மாறாமல் ருசிகர உணவு வகைகளை வழங்கி வருவதால்தான் இது சாத்தியமாகிறது.

சமைக்கப்படும் உணவில் சுத்தம் மற்றும் பாத்துக்கப்பு மிகவும் அவசியமாகிறது. அதனால்தான் மையப்படுத்தப்பட்ட சமையலறை முறையை நாங்கள் பின்பற்றி வருகிறோம். பெரும்பாலும் செயற்கை நிறமூட்டிகளை உணவில் கலப்பதை தவிர்த்து விடுகிறோம். மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் உள்ளிட்ட அனைத்துவகை மசாலா கலவைகளும் நாங்களே தயாரிப்பதால் உணவு சுவையாக இருக்கிறது என்றவர்.,

உணவின் தரமானது அவை சமைக்கும் சுகாதாரத்தில் தான் இருக்கிறது எனத் தொடர்ந்தார்., சாப்பிடும் உணவுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல் உணவகத்திற்கு சாப்பிட வரும் மக்களுக்கு உணவகத்தின் சூழலை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க வேண்டும். இவ்வாறாக, குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்வு எங்கள் உணவகத்தில் நிகழ்ந்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் பேசிய பாலச்சந்தர், “இவ்வுலகம் உள்ளவரை உணவும் இருக்கும், இவை பிரித்திட முடியாத ஒன்று”  எனக் கூறினார்.

உணவில் அரவணைக்கும் முறை

1968-ம் ஆண்டு நாகர்கோவிலில் தொடங்கப்பட்ட உணவகம் தற்போது கோவை, சிங்கப்பூர், உள்ளிட்ட இடங்களில் தன்கிளைகள் விரித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.,என்று நம்மிடம் பேசினார், பிரபல நாகர்கோவில் ஆரிய பவன் உணவக்கத்தின் கோவை கிளை மேலாளர் தேவன்.

அவர் பேசியதாவது,வாழ்வதற்கான அடிப்படை தேவைகளில் ஒன்றுதான் உணவு. அப்படியான உணவின் முக்கியத்துவத்தை உலக உணவு தினத்தில் மட்டும் உணர வேண்டும் என்பதில்லை; ஒவ்வொரு நாளும் உணர வேண்டும். இந்த உலகில் பசி வேதனையால் வாடும் மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அதனால், கூடுமானவரை உணவினை வீணாக்குவதை தவிர்த்துவிடுங்கள். இதனை வலியுறுத்தும் நோக்கில் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வை கொண்டு வரும் பொருட்டு எங்கள் உணவகங்களில் உணவுகள் வீணாக்கப்படுவதில்லை என்றவர்.,

ஒரு தாய் எப்படி தன் குழந்தைக்கு தினமும் உணவில் உப்பு, காரம் உள்ளிட்ட சுவைகளை பார்த்து பார்த்து சமைத்து தருகிறாரோ.,அதை முதன்மை கொள்கையாக எடுத்துக் கொண்ட எமது நிறுவனத்தின் தலைவர் அவ்வாரே இங்கு சாப்பிட வரும் மக்களுக்கு உணவு அளிக்கிறார். உணவின் அடிப்படை விவசாயம் அதனால், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் எனப் பேசினார்.

மெனுவில் முக்கிய இடம் பிடித்திருக்கும்

டிஜிட்டல் உலகில் பல்வேறு துறைகளில் புதுமைகள் வந்தவண்ணமாக இருக்கிறது. உணவுத் துறையிலும் புதுமைகள் வந்துவிடவே, மேலைநாட்டு உணவு முறைகள் தற்போது நம் நாட்டில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இவை பன்முகத்தன்மை என்றால்கூட, சிலநேரங்களில் உடல் ரீதியாகப் பாதக விளைவுகளைச் சந்திக்கத்தான் செய்கிறோம்., என்று அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கூறுகிறார்.

நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய உணவு முறை நமக்குக் கிடைத்த பொக்கிஷம். குழந்தைகள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு தாயினால் மட்டுமே உலகின் மிகச் சிறந்த உணவை உருவாக்க முடியும் என்பதால் அவர் இருக்கும் வரை அவரின் கைகளால் உணவைச் சாப்பிடப் பழகுங்கள். ருசிக்கும் உணவில் அன்பு கலந்தால் உணவே மருந்தாகும்.

இதை முன்னிறுத்தி, அன்னபூர்ணாவில் உணவுகள் சமைக்கப்படுகிறது. மேலும், அன்னபூர்ணா ஸ்வீட்ஸிலும் நாட்டுச்சக்கரை, பனைவெல்லம் போன்றவை சேர்க்கப்படுகிறது. மேலும், சிறுதானிய உணவு வகைகளும் எங்கள் மெனுவில் இடம்பெறுகிறது. இங்கு வரும் மக்களிடம் உணவின் முக்கியத்துவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கூடுமானவரை உணவை வீணாக்காதீர் என்றார்.