மாநகராட்சி அலுவலகத்தில்  அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு…

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்விற்கு  மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் அனைத்து ஊழியர்கள், பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும்  உதவி ஆணையர் (கணக்கு) சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று அரசமைப்பு தினத்தின் உறுதிமொழியை எடுத்தனர்.