கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு 8 விருதுகள்!

கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான மருத்துவ சேவைகள் அளிப்பதில் தனி முத்திரை பதித்துவருகிறது. அதற்காக பல்வேறு அமைப்புகள் வழங்கும் விருதுகளை வருடா வருடம் தொடர்ந்து பெற்றுவருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல தேசிய ஆங்கில பத்திரிகையான பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் கீழ் 8 விருதுகளை அளித்துள்ளது.

விருதுகள் பெற்ற பிரிவுகள்

  • அவசரசிகிச்சை
  • இருதயம்
  • நரம்பியல்
  • புற்றுநோய்
  • மகளிர் நலம் மற்றும் மகப்பேறு
  • சிறுநீரகவியல்
  • காது,மூக்கு,தொண்டை

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் சார்பில் ஹெல்த்கேர் அவார்டு 2024 விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை 8 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. அவசரகால மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, இருதய மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, நரம்பியல் மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, சிறுநீரக மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை மற்றும் காது,மூக்கு,தொண்டை,மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை என மொத்தம் 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி இதுபற்றி குறிப்பிடுகையில், ‘குறிப்பிடத்தக்க இந்த சாதனைக்காக கே.எம்.சி.ஹெச் -ல் பணியாற்றும் அனைவரும் பெருமைப்படுகிறோம். மேலும் சிறந்த முறையில் செயல்பட்டு சிறப்பான மருத்துவ சேவைகள் அளித்திட இதுபோன்ற அங்கீகாரம் பெரிதும் ஊக்கமளிக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு உறுதுணையாய் விளங்கிய கே.எம்.சி.ஹெச் குழுவினருக்கு நான் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கே.எம்.சி.ஹெச் அவார்டு விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. கே.எம்.சி.ஹெச் நாராயணன், மூத்த துணைத் தலைவர், மார்கெட்டிங், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் விருதுகளைப் பெற்று கொண்டார். குமார் சர்மா, உதவி ஆசிரியர், பைனான்சியல் எக்ஸ்பிரஸ் டிஜிட்டல், ஆனந்த் கரத், துணைத் தலைவர், டிஹெச் கே.எம்.சி.ஹெச் அண்டு லைஃப் சயன்சஸ் மற்றும் ரோஷன் பூவையா, ஆசிரியர், பைனான்சியல் எக்ஸ்பிரஸ் டிஜிட்டர் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.