பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி  கே.பி.ஆர். மில் பெண் பணியாளர்கள் அசத்தல் 

கே.பி.ஆர். மில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக, அவர்கள் பணிபுரிந்து கொண்டே உயர் கல்வியை தொடரும் வகையில் கே.பி.ஆர். மில் பணியாளர்கள் கல்வி பிரிவு செயல்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து பணியாளர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற அனைவரையும் கே.பி.ஆர். நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி பாராட்டினார்.

இது பற்றி கே.பி.ஆர். பெண் பணியாளர்கள் கல்வி பிரிவு முதல்வர் சரவண பாண்டியன் கூறுகையில், “:எங்களது கே.பி.ஆர். குழும நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களில் உயர் கல்வி தொடர விருப்பமுள்ள அனைவருக்கும் தங்கள் விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்து படிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும், ஆசிரியர்களையும் நியமித்து அவர்கள் படிப்பதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதில் பெண் பணியாளர்கள் பிளஸ் 2, இளங்கலை பட்ட படிப்புகள் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் படிப்புகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுதிய 22 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சியைக் கொடுத்துள்ளனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற பூமிகா (545 மதிப்பெண்கள் ) மற்றும்  நிலா தேவி (507  மதிப்பெண்கள்) இரு மாணவிகளுக்கும்  கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் இலவசமாகக் கல்வி பயில்வதற்கான வசதியே கே.பி.ஆர். மில் நிர்வாகம் செய்து தருகிறது.  முதலிடம் பிடித்த இரு மாணவிகளுக்கு கே.பி.ஆர். மில் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் அருண்குமார்  பரிசு வழங்கி பாராட்டினார் .