கோவையில் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவர்கள்

கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த இரண்டு சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை உப்பிலிபாளையம் காந்திபுதூரை சேர்ந்தவர் பிரகாஷ். மீன் கடை நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் கத்திமுனையில், அவரிடம் இருந்த ரூ. 5 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து பிரகாஷ் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் பிரகாஷிடம் பணம் பரித்த்வர்கள் சின்னியம்பாளையத்தை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு பெற்றோர்களிடம் ஏற்பட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.