ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

சமீபத்தில் இக்கல்லூரியில் பல்வேறு நிறுவனங்கள் வளாக நேர்காணலை நடத்தினர். இந்நேர்காணலில் கல்லூரியில் மூன்றாமாண்டில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பயிலும் மாணவர். சஞ்சய் ராஜ்குமார் சென்னையில் உள்ள மெக் டெர்மட் இன்டர்நேஷனல், லிமிடெட் நிறுவனத்தில் ஆண்டு சம்பளமாக ரூபாய் ஐந்து லட்சம் என்ற அளவில் வேலைவாய்ப்பிற்கான பணி ஆணையைப் பெற்றுள்ளார்.

ஆட்டோமொபைல் துறையில் பயிலும் மாணவர் திவ்யேஷ், கோவையிலுள்ள விஸ்டன் டெக்னிக்கல் அண்ட் சர்வீஸ் சென்டர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஆண்டு சம்பளமாக ரூபாய் நான்கு லட்சம் என்ற அளவிலும், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் துறை மாணவி சண்முகி ஆதித்ய பிர்லா குரூப்-பிர்லா பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஆண்டு சம்பளமாக ரூபாய் 3.3 லட்சம் என்ற அளவிலும் வேலை வாய்ப்பிற்கான பணி ஆணையைப் பெற்றுள்ளார்.

மேலும் இக்கல்வியாண்டில் மூன்றாமாண்டில் பயிலும் பல்வேறு மாணவர்களுக்கு புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்களை இக்கல்லூரியில் இயங்கும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.