‘ஒழுக்கம், கடின உழைப்பு’ ஒருவரை முன்னேற்றும்

கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

டாக்டர் என்.ஜி.பி கலையரங்கில் நடந்த விழாவில் பங்கேற்று சிறப்புரை வழங்கிய கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி மாணவ-மாணவியர் ஒழுக்கத்தையும், கடின உழைப்பையும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி உரையாற்றினார். ஒருவர் வாழ்வில் முன்னேற ஒழுக்கமே அடிப்படியானது என்று பேசி மாணவர்களுக்கு ஊக்கமளித்து, கல்லூரியின் விதிமுறைகள், பிசியோ மற்றும் ஆக்குபேஷனல் தெரபி பற்றிய எதிர்கால வாய்ப்புகளை பற்றி எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் என்.ஜி. பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை கல்வி அலுவலர் புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். கே.எம்.சி.ஹெச் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியின் இயக்குநர் சுஜாதா மிஷல் மற்றும் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியின் முதல்வர் சசிதர் ராவ் மற்றும் பிசியோதெரபி கல்லூரியின் இயக்குநர் டாக்டர் எட்மண்ட் டி கோட்டோ முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளை வரவேற்றனர்.

மேலும், என்.ஜி.பி கல்லூரியின் கல்வி இயக்குநர் முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். விழாவின் தொடர்ச்சியாக கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரியின் துணை முதல்வர் கல்பனா நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் 235 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.