நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த  உணவுகள் முக்கியம்..

டெங்கு வைரஸின் பாதிப்பு தற்போது அதிகளவில் பரவி வரும் நிலையில், நம் உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பாதுகாத்து, சத்தான உணவு முறையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். டெங்கு பாதிப்பின் போது உடலில் உள்ள ரத்தத் தட்டுக்களின் அளவைக் குறைக்க செய்யும்.  அத்தகைய பாதிப்பிலிருந்து வேகமாக மீள்வதற்கு உதவும் சில உணவு குறிப்புகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்…

கிவி பழம்:

டெங்கு பாதிப்பிலிருந்து வேகமாக மீள்வதற்கு ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் போதிய வைட்டமின்களும் தேவை.

டெங்கு பதிப்பின் போது அதிக  சத்துக்கள் நிறைந்த கிவி பழத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி தோற்று நோயிலிருந்து நம்மை எதிர்த்து போராட உதவுகிறது.

பச்சை காய்கறிகள்:

கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற இலை கீரைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் போதிய அளவிலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. இது உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனத்தை குறைக்க உதவி செய்கிறது.

மாதுளை பழம் :

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள்  முதலில் மாதுளை பழத்தை மிக கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையும், ஹீமோகுளோபின் எண்ணக்கையும் அதிகரிக்க செய்யும் மாதுளைப் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இது நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்து உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள் 

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிட்ரஸ் பழங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம். ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை நோய் பாதித்திருக்கும் நேரத்தில் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி  நிறைந்துள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த மிக உதவுகிறது.

மேற்கண்ட சத்தான பழங்களை உட்கொண்டு வருவதால் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்கை முறையை மேம்படுத்த உதவுகிறது.