சளி நோயை குணமாக்கும் பெருங்காயம்

தற்போது இருக்கும் காலகட்டத்தில் தவறான உணவு முறையை பழக்கப்படுத்தி வருகிறோம். அதுபோல சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பதும், மசாலா கலந்த நவீன உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானங்களை சாப்பிட்டு வருகிறோம்.

இதனால் பலருக்கும் செரிமான பிரச்னை, மார்பு சளி நோய் ஏற்படுகிறது. ஆனால் உணவில் பெருங்காயத்தை சேர்த்துக்கொண்டால் அந்த பிரச்னை நீங்கி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் பெருங்காயம் செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் இருப்பதை விட அதிக மருத்துவ குணங்கள் பெருங்காயத்தில் இருப்பதாகவும். வயிறு வீக்கம், வயிறு வலி, குடல் புழுக்கள் ஆகியவற்றிற்கு மிக சிறந்த மருந்தாக பெருங்காயம் இருப்பதாக கூறப்படுகிறது.

பெருங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் சளி, வைரஸ் தோற்று, ஆஸ்துமா அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் தினமும் பெருங்காயத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பு சளி நோய் குணமாகும் என்று கூறப்பட்டு வருகிறது.