ஓய்வில்லாமல் உழைத்தால் எவரெஸ்ட் சிகரத்தையும் தொடலாம்!

ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் சிறப்புரை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயா தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் மற்றும் டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் இயக்குநரும், SJN இன்டர்நேஷனல் பள்ளியின் செயலாளருமான முனைவர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “சூடுக வெற்றி வாகை” எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அதில், நாட்டுப்பற்று, சுய ஒழுக்கம், சமூக சிந்தனை ஆகிய பண்புகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அதிக ஊதியம் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப துறை சார்ந்த வேலைகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வது அவசியம் என்றவர்.,ஓய்வில்லாமல் உழைத்தால் எவரெஸ்ட் சிகரத்தையும் அடையலாம் என மாணவர்களுக்கு கவிதை மூலம் ஊக்கப்படுத்தி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும்,  இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் நடராஜன், டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில்  முதலாமாண்டு பயிலும் 15- கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், அறிவியல் மற்றும் மனிதவியல் துறை தலைவர் உமா, பேராசிரியர்கள் ஆகியோர்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.