இரத்தினம் கலை கல்லூரியில் பட்டமளிப்பு  விழா

இரத்தினம் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பெங்களூரு, விநாயகம் டேலெண்ட் அக்யூசிஷன் ஜென்பேக்டின் துணைத்தலைவர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மாணவர்களை நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை என்று சுட்டிக்காட்டினார். மேலும் ரத்தினம் கலை கல்லூரி கல்வியில் உயர் தரத்தை பராமரித்து, இளம் பட்டதாரிகளை சமூகத்தின் உறுப்பினர்களாக மாற்ற உதவுகிறது என்றும், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் எதிர்காலம் அவற்றுடன் போட்டியிட மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட அறிவை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை துறைகளைச் சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான மாணிக்கம், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.