கே.பி.ஆர் கல்லூரியின் ‘மாணவர்கள் தின விழா’ கொண்டாட்டம்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கிகானி குரூப் ஆஃப் டெக்ஸ்டைல்ஸின் நிர்வாக பங்குதாரர் நெய்ல் கிகானி கலந்துகொண்டார். அதோடு  கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, கல்லூரி முதல்வர் கீதா, கணினி அறிவியல் புல முதன்மையர் ஷர்மிளா, வணிகத்தொழில்முறைக் கணக்கியல்  துறைத்தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பேசிய நெய்ல் கிகானி,  ஏ.பி.ஜே. அப்துல் கலாமை நினைவுகூர்ந்து, மாணவர்கள் தங்கள் வாழ்வின் இலட்சியத்தை அடையும் பாதையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

விழாவை தொடர்ந்து பைன் ஆர்ட்ஸ் கிளப்  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.